தேர்தல் விஞ்ஞாபனங்களில் மதுசாரம், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளில் திருப்தியில்லை – ADIC நிறுவனம்

Date:

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் புகையிலை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக உள்ளடக்கியிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பில் திருப்தியில்லை என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வெளியிட்டு செய்தியறிக்கையில்,

09வது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞான ரீதியான அடிப்படையில் 12 பரிந்துரைகள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி  மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் இம்முறை போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முனவைக்கப்பட்டது.

தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 06.09.2024 வரை வெளியிட்ட விஞ்ஞாபனங்களில் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளது என்கின்ற விஞ்ஞாபனப் பகுப்பாய்வை எமது நிறுவனம் மேற்கொண்டது.

எமது அவதானிப்பின்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் புகையிலை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக உள்ளடக்கியிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பாக இன்னமும் மகிழ்ச்சியடைய முடியாது.

எனினும், சில வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் இவை தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் பாராட்டப்பட வேண்டியவையே.

எமது நாட்டில் பிரதான பிரச்சினையாக அமையும் மதுசாரம், புகைத்தல் மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதானது, பொது மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், சமூகம் உட்பட சூழல் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

ஆகவே நாட்டினதும் நாட்டு மக்களினதும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் கொள்ளைகளுடன் இப்பரிந்துரைகளையும் இணைத்துக்கொள்வார்கள் என நாம் நம்புகின்றோம்.

மேலும், இம்முறை தேர்தலினூடாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்தி நாட்டில் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக விரைந்து செயற்படுவார் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் எதிர்பார்க்கிறது என்றுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...