நாட்டை விட்டு வெளியேறினார் பசில்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வெளியேறவுள்ளதாக தகவல்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை (20) காலை பயணமாகியுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளார்.

பசில் ராஜபக்ஷ இந்த விமான சேவைக்காக 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள  Gold Route முனையத்தின் வசதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ துபாய் சென்று பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்வார் எனவும் அவர் அமெரிக்கா செல்வதற்கு எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...