பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கைது!

Date:

காசா போரை கண்டித்து டென்மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசா முனையில் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து, டென்மார்க்கில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில், ‘ஆக்கிரமிப்புக்கு எதிராக மாணவர்கள்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், சுவீடனைச் சேர்ந்த 21 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கலந்து கொண்டார்.

இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுடனான கூட்டமைப்பை கோபன்ஹேகன் பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் எனவும், இனப்படுகொலைக்கு துணைபோகக் கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து  பொலிஸார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் , கைது செய்யப்பட்ட நபர்களில் கிரேட்டா தன்பெர்க்கும் ஒருவர் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது பிரச்சாரத்திற்காக பரவலாக அறியப்பட்ட தன்பெர்க் பலஸ்தீனிய விவகாரத்தை பெரிதாக கையிலெடுத்த அவர் ‘எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...