முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

Date:

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பில்  உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

2020 பொதுத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

வெல்கம 2007 முதல் 2010 வரை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராகவும், 2010 முதல் 2015 தொடக்கம் வரை இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

குமார வெல்கமவுக்கு சுகயீனம் ஏற்பட்டமையினால் மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...