மேற்குக் கரை–ஜோர்தான் எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொலை: ஜோர்தான் மக்கள் ஆரவாரம்

Date:

நேற்று ஜோர்தானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அல் காராம என்ற எல்லை பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொலைசெய்யப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் மாஹிர் அல் ஜாசி என்ற கொள்கலனை ஓட்டிச்செல்லும் ஒரு சாரதியாவர். இந்த சம்பவம் குறிப்பாக ஜோர்தான் மக்கள் மத்தியில் பரவலாக எழுச்சி மிக்க சம்பவமாக பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அங்குள்ள மக்கள்  மகிழ்ச்சியும் ஆரவாரத்தையும் வெளிப்படுத்திய காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன.

இது இஸ்ரேலை சூழவுள்ள நாடுகளுகளிலே இருக்கின்ற அரேபியர்கள் எந்தளவு தூரம் இஸ்ரேல் அராஜகத்தை வெறுக்கின்றார்கள்.எவ்வளவு தூரம் வெறுப்போடு இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றது.

இந்நிலையில் தமது பக்க எல்லையை மூடியதாக குறிப்பிட்டிருக்கும் ஜோர்தான் இது தொடர்பில் விசாரணை நடத்துவதாக  தெரிவித்துள்ளது. ஜோர்தானில் இருந்து பொருட்களை ஏற்றிய வாகனங்கள் மேற்குக் கரைக்கு பயணிக்கும் நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் பதற்றம் நீடித்து வருகின்றமை குறிப்படத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...