யாழில் சர்ச்சைக்குரிய கருத்து; அநுரவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

Date:

யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான அநுரகுமார திசாநாயக்கவை கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரனவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் இந்த தேர்தல் மூலம் அந்த மாற்றம் வரும், ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என தென்பகுதி மக்கள் தெரிவிக்க கூடும் என யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

அநுரகுமார திசாநாயக்கவின் குறித்த கருத்து இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக  தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில...

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான்...

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...