கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

Date:

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த மரணம் தொடர்பில் இதுவரை 10க்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

எயார்பஸ் கொள்வனவின் போது பில்லியன் டொலர்களை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்ற வந்த நிலையலில் அவர் கடந்த 8ம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது நான்கு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து வழக்கு இம்மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...