வருமான வரி செலுத்தத் தவறியவர்களுக்கு காலக்கெடு

Date:

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துவதைத் தவறினால் அல்லது தாமதப்படுத்தும் நபர்கள் சட்ட ரீதியான அபராதம் மற்றும் வட்டி செலுத்துதலை எதிர்கொள்ள நேரிடும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வரிக்கான நிலுவைத் தொகையும் செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

திங்கட்கிழமைக்குப் பிறகும் ஏதேனும் வரிகள் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த நிலுவைத் தொகையை வசூலிக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, திணைக்களம் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று சந்திரசேகர எச்சரித்தார்.

மேலும் விவரங்களுக்கு, தனிநபர்கள் 1944 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது பிராந்தியத்தில் உள்ள உள்நாட்டு இறைவரி பிராந்திய அலுலகங்கத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...