விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு!

Date:

சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதிய சட்டத்தின் உரிய விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கட்டாய ஓய்வு வயதை திருத்துமாறு (01) அன்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளரின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயமானது சுகாதார அமைச்சின் செயலாளரால்  மாகாண சுகாதார செயலாளர்கள், கொழும்பு, கண்டி மற்றும் காலி தேசிய வைத்தியசாலைகளின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகங்கள்.

மற்றும், அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள், அனைத்து தர வைத்திய அதிகாரிகள், விசேட பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து நிர்வாக தர வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக...