முதலாவது முஸ்லிம் ஆளுநரும், முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கீர் மாக்காரின் 27ஆவது வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இன்று (10) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அலைவரிசையில் மும்மொழிகளிலும் விசேட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படவுள்ளன.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சிங்கள சேவையில் இன்று மாலை 5 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உரையாற்றவுள்ளதுடன் இரவு 7.30 மணிக்கு தமிழ் சேவையில் பாராளுமன்ற நூலகர் எஸ்.எல். ஸியாத் அஹமட் உரையாற்றவுள்ளார்.
அதேநேரம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இரவு 8.05 மணிக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொருளாளர் கலாநிதி அஸ்வர் அஸாஹிம் அவர்களும் இரவு 8.45 மணிக்கு இலங்கை வானொலி ஆங்கில சேவையில் ஜனாதிபதி சட்டத்தரணி லட்டுவாஹெட்டி அவர்களும் உரையாற்றவுள்ளனர்.