இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Date:

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

தென் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் ஹபரண, ஹிங்குராகொட, இபலோகம மற்றும் தப்போவ போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

 

Popular

More like this
Related

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக...

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...