குவைத்தை மையமாக் கொண்டு இயங்கும் இலங்கை மாணவர்கள் ஒன்றியம் ‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்’ எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு, பலகத்துறை அல்-பலாஹ் கல்லூரியில் தலைமைத்துவ மற்றும் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வொன்றினை அண்மையில் (31.08.2024) நடத்தியது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக Dr. ரிஷாட் புஹாரி மற்றும் அஷ்-ஷெய்க் எம்.டீ .எம். நுஸ்ரத் (நளீமி) கலந்துகொண்டனர்.
கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் எம்.யூ. பாயிஸ் (நளீமி), பாடசாலையின் பிரதி அதிபர்கள் எம்.எம்.எம். சதீஸ்கான், ஷஹாமா மொஹமட், மற்றும் உறுப்பினர்களும் இநிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
தரம் 11, 12, 13 ஆகிய மாணவர்களுக்கான இம் முழுநாள் நிகழ்வில் பகல் போசனம் மற்றும் மாலை நேர தேநீர் உபசாரம் போன்றவையும் வழங்கப்பட்டது.
Masha allah
Keep it us guys