அண்மையில் பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத் என்ற இளைஞர் தன்னுடைய விடாமுயற்சியின் காரணமாக இலங்கை முழுவதும் 45 நாட்களில் சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை நடை பவனியாக சென்று சாதனை படைத்தார்.
இதன் காரணமாக தற்போது அவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவராக மாறியுள்ளார்.
அவரை கௌரவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில் அவருக்கு புனித மக்கா சென்று வருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அவருடைய ஊரில் இதற்கான பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி இந்த வீடியோவில் காண்பிக்கப்படுகிறது…..