இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள துருக்கி

Date:

பலஸ்தீன  மக்களுக்கெதிராக இஸ்ரேல் தொடர்ந்த தாக்குதல் நடத்திவரும் வரும் நிலையில் துருக்கி நாட்டின் ஜனாதிபதி இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்தான்புல் நகரில் நேற்று (07) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவாகிக்கொண்டே வருகிறது. அவர்களின் இந்த திமிரையும், அடாவடித்தனத்தையும், பயங்கரவாதத்ததையும் அடக்க ஒரே வழி இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது தான்.

மேலும் எகிப்து மற்றும் சிரியா உடனான ராஜாங்க உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் துருக்கி உள்ளது. இதன்மூலம், அவர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒரே அணியாக நிற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன், லெபனான் மற்றும் சிரியாவும் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் உள்ளது” என்று எர்டோகன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சமூக செயல்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்கப்  பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

அந்த வகையில் உயிரிழந்த குறித்த பெண், துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதுடன் சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அவரது கொலைக்கு வெள்ளை மாளிகை (The white house) கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஐசெனுா் எஸ்கியின் கொலைக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகனும் தனது பேச்சின் போது கண்டனத்தை வெளியிட்டு ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளமை மத்திய கிழக்கில் முக்கிய நகர்வாக பார்க்கப்டுகின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...