ஓய்ந்தது தேர்தல் பரப்புரை; 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதி

Date:

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் எனும் கேள்விக்கான பதிலை அறிய இன்னும் மூன்று நாட்களே எஞ்சி உள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி தேர்தல் களமானது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நாட்டினுடைய எதிர்காலத்தின் நிலையினை தீர்மானிக்கின்ற பெரும் பொறுப்பு நாட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தல் களத்தில் 39 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திசநாயக்கவும்  பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் பிரதான வேட்பாளர்கள் என்ற வரிசையில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றனர்.

அதேவேளை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினரால் தமிழ் பொதுவேட்பாளராக பா.அரியநேந்திரன் போட்டியிடுகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

இக்காலப்பகுதியில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முன்னெடுக்கப்படும் அவசியமற்ற பிரசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர்...

“திருக்குர்ஆனை மனனம் செய்வது மூளையின் செயலாக்கத் திறனை அதிகரிக்கும்”: நரம்பியல் பார்வையை விளக்கும் கண் மருத்துவ நிபுணர்!

திருக்குர்ஆனை மனனம் செய்வது வெறும் ஆன்மீக ரீதியான ஆசீர்வாதம் மட்டுமல்ல, அது...

கணினி அமைப்புக் கோளாறால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு...