எதிர்வரும் 8 ஆம் திகதி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை, உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு, களுத்துறையில் அமைந்துள்ள சமூக தொண்டு நிறுவனம் களுத்துறை அபிவிருத்தி அமைப்பும் (KDC) மற்றும் அமேசன் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கருத்தரங்கு , G.C.E (O/L) மற்றும் G.C.E (A/L) மாணவர்கள், பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்கள், மற்றும் உயர்கல்வி மற்றும் தொழில் தேடுகின்றவர்களும் கலந்து கொள்ள முடியும்.
நிகழ்வுக்கு வளவாளராக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவன பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் வருகை தரவுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு, 0765 770 733 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.