கென்யாவில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் பலி

Date:

கென்யாவின் நெய்ரி நகரில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீ விபத்தானது நேற்றைய தினம் (05) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெய்ரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா (Hillside Endarasha Academy) என்ற ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்ததுடன், 13 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...