சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலய திறப்பு விழாவும் பொது கூட்டமும்

Date:

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சாய்ந்தமருது காரியாலயத்தின் திறப்பு விழாவும் பொது கூட்டமும் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை  முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், எம்.சி. பைசால் காசிம் ஆகியோரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தவிசாளருமான முழக்கம் எம். அப்துல் மஜீத், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பை, கட்சியின் பொருளாளரும் உயர் பீட உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம். ஐ. பிர்தௌஸ் ஆசிரியர் மற்றும் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரும் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி சமால்டீன், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், சாய்ந்தமருது மத்திய குழுவின் வட்டார அமைப்பாளர்கள், சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெண்கள் என பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...