சுங்கத்தினால் விடுவிக்கப்பட்ட குர்ஆன் பிரதிகளின் ஒரு தொகை கொழும்பு பெரிய வாசலுக்கு கையளிப்பு!

Date:

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இலங்கை இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குர்ஆன் பிரதிகளின் ஒரு தொகை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு இன்று (13) கையளிக்கப்பட்டன.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகத்தர் அல்ஹாஜ் ஸுஹைருல் அஸ்மி அவர்களிடம் இந்த பிரதிகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உதவி பணிப்பாளர் என்.நிலூபர் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் முப்தி முர்சி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகள் இன்னமும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாகவும் விரைவில் முஸ்லிம் சமூகத்திடம் அவை ஒப்படைக்கவுள்ளதாகவும் இதற்கென அரசாங்கம் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் திணைக்களப் பணிப்பாளர் நவாஸ் தெரிவித்தார்.

கொழும்பு துறை­மு­கத்தில் கடந்த மூன்று மாதங்­க­ளாக தேங்கிக் கிடந்த 25 ஆயிரம் அரபு மொழி­யி­லான புனித அல்­குர்­ஆன் பிரதிகள் சுங்கத் திணைக்­க­ளத்­தினால் செவ்வாய்க்கிழமை (10) விடு­விக்­கப்­பட்டிருந்தன.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் பைசல் ஆப்தின் பெய­ருக்கு மக்­காவில் வசிக்­கின்ற இலங்­கையைச் சேர்ந்த சாதீக் ஹாஜி­யா­ரினால் இந்த குர்­ஆன்கள் அனுப்­பப்­பட்டிருந்தன.

இதனை விடு­விப்­ப­தற்­கான அனு­ம­தி­யினை திணைக்­க­ளத்தின் புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு,கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி வழங்­கி­யி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து பாது­காப்பு அமைச்சும் ­குர்­ஆன்­ பிரதிகளை விடு­விப்­ப­தற்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யி­ருந்­தது.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...