ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சர்வ மதத் தலைவர்களினால் பல கோரிக்கைகள் முன்வைப்பு

Date:

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக தர்ம சக்தி அமைப்பினூடாக ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் பௌத்த, இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்களின் கூட்டமைப்பான தர்ம சக்தி அமைப்பின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் (18) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது சர்வ மதத்தலைவர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன,

ஊழல், வன்முறை அற்ற சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக பாடுபடுதல்,

கோபம், குரோதம்,பழிவாங்கல், துன்புறுத்தல் இன்றி அனைத்து மக்களிடையேயும் நல்லிணக்கத்தை பேணுதல்,

அரச சொத்துக்களை முறைகேடாகவும் தவவறாக பயன்படுத்துவதை தவிர்த்தல்
எந்த ஒரு நபரும் தாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பது ஜனநாயக உரிமை என்பதை ஏற்றுக்கொள்வது,

உள மற்றும் பௌதீக சூழலை மாசுப்படுத்தாமல் சமாதானத்துடன் சகவாழ்வுடன் கூடிய அரசியலில் ஈடுபடுவது,

அனைத்து இன மற்றும் மத அடையாளங்களுக்கும் பெறுமானங்களுக்கும் மதிப்பளித்து அனைவரினதும் உரிமைகளையும் பாதுகாப்பது,

அனைவரினதும் ஆத்ம திருப்திக்காக சமத்துவத்துடன் கூடிய நல்லாட்சியை நிலைநாட்டுவதற்காக பாடுடுதல்

நடைமுறையிலிருக்கும் தேர்தல் சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றுவதுடன் ஒழுக்க நெறியுடன் கூடிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது,

தேர்தல் காலங்களிலும் அதன் பின்னரும் எந்தவொரு மோதல்களும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதுடன் மக்களுக்கு பொறுப்பு கூறக்கூடிய மனித நேயமிக்க ஆட்சிக்காக அர்பணிப்புடன் செயற்படுவது என மனித நேயம் மற்றும் ஜனநாயகத்தின் மீது உறுதியளித்தல்.

உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...