ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற ஒரு மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக இங்கிலாந்தின் 3ஆவது சார்ள்ஸ் மன்னர் கலந்து கொண்டிருந்தார்.
பூக்களுக்கான கண்காட்சி வைபவத்தை திறந்து வைப்பதற்காக திறப்பு நாடாவை வெட்டுவது ஒவ்வொரு விழாக்களில் வழக்கமாகும்.
அந்தவகையில் ஸ்கொட்லாந்தில் நடைபெறும் 200வது ஆண்டு கோடைகால மலர் கண்காட்சிக்கு சார்லஸ் தனியாக விஜயம் செய்தார்.
இதன்போது இந்த கண்காட்சியில் நாடாவை வெட்டுவதற்காக மன்னருக்கு கத்திரிக்கோல் வழங்கப்பட்ட போது வெட்டமுடியாமல் திணறும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது.
இந்த வீடியோவில் சார்ள்ஸ் மன்னர் நாடாவை வெட்டுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வதையும் இறுதியாக நாடாவை வெட்டி திறப்பு விழாவை ஆரம்பித்து வைத்ததையும் அதனை பார்த்த கொண்டிருந்த மக்கள ரசித்து சிரிப்பதையும் இந்த வீடியோ காட்டுகின்றது.
என்னதான் உலகத்தில் உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் கூட அடிசறுக்கின்ற சந்தர்ப்பங்கள் வரத்தானே செய்யும்.