நாட்டில் அவ்வவ் போது மழை பெய்யக்கூடும்

Date:

இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொணராகலை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளையில் ஏற்படக் கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...