பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.