பொதுத் தேர்தல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீர்மானம்

Date:

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து திருகோணமலை  மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்று (27) இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட மத்தியக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெிரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மத்திய குழுக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப், உயர் பீட உறுப்பினர் ஹில்மி முகைதீன் பாவா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...