மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

Date:

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு கட்டிடம் செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க 150 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் திட்ட முகாமைத்துவம் மற்றும் நிர்மாண பிரிவின் கீழ் 10 மாதங்களில் இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்கள் சிலரின் பங்கேற்பில் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால, அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரமேஷ் அருண ஜயசேகர உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக...

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...