முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ வீடுகள் மீள கையளிப்பு: பொலிஸ் பாதுகாப்பும் நீக்கம்

Date:

முன்னாள் அமைச்சர்களுக்கு பயன்படுத்திய உத்தியோகபூர்வ அரச வீடுகளை திரும்பப் பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிக்காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகளை ஒப்படைக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் எம்.பி.க்கள் மாதிவெல குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய  வீடுகளின் எண்ணிக்கை 50 ஆகும்.

இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீள பெறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...