விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும்: ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Date:

அரச மற்றும் தனியார் துறைகளில் சம்பளம் மற்றும் சொந்த விடுமுறையினை இழக்காத வகையில் வாக்கினை அளிப்பதற்குச் சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

குறித்த தகவல் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காவிடின் அது அடிப்படை உரிமை மீறலாகக் கருதப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நேற்று ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தொடர்ச்சியாக 4 மணிநேரம் தேவை என்பதால், அன்றைய தினம் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...