2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அவர்களது பிரதிநிதிகளையும் இன்று (09) கலந்துரையாடலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.