ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மறைவையடுத்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி துக்க காலத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் நேற்று (28) அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்தையொட்டி ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா ஈரானில் (Iran) 5 நாட்கள் துக்க காலத்தை அறிவித்துள்ளார்.
மேலும், ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்திற்கு பழிவாங்காமல் நீதி கிடைக்காது என்று ஈரானின் உச்ச தலைவர் கூறியுள்ளார்.
எனினும் ஹிஸ்புல்லா தலைவரின் மரணம் வரலாற்று திருப்புமுனையாக அமையும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் பலருக்கு நீதியை பெற்றுத்தரும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேல் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் ஆன்மிக தலைவர் இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.