2024 ஜனாதிபதித் தேர்தல்: வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்

Date:

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் போது செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்வது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு, ஆட்கள் பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மதகுரு அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் என்பனவும் வாக்களிக்க செல்லுபடியாகும்  என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவையும் வாக்களிக்க செல்லுபடியாகும்.

தெளிவில்லாத அடையாள அட்டைகள், அமைச்சுகள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பத்தின் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...