2024 ஜனாதிபதி தேர்தல்: வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகாிப்பு!

Date:

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்குபதிவின் போது, வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படுகின்ற அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக இந்த அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு அபராதத் தொகைக்கு மேலதிகமாக ஒரு வருடத்திற்கும் மேற்படாத விளக்கமறியல் விதிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் நேற்றுவரை பதிவான மொத்த தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4215 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 184 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த முறைப்பாடுகளில் 3641க்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 574 முறைப்பாடுகள் தொடர்பான
விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...