2024 ஜனாதிபதி தேர்தல்: வாக்கு பெட்டி விநியோகம் ஆரம்பம்

Date:

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாக்கியுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று (20) காலை முதல் இடம்பெறும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (20) கூடுதல் தொலைதூர சேவை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர்...

“திருக்குர்ஆனை மனனம் செய்வது மூளையின் செயலாக்கத் திறனை அதிகரிக்கும்”: நரம்பியல் பார்வையை விளக்கும் கண் மருத்துவ நிபுணர்!

திருக்குர்ஆனை மனனம் செய்வது வெறும் ஆன்மீக ரீதியான ஆசீர்வாதம் மட்டுமல்ல, அது...

கணினி அமைப்புக் கோளாறால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு...