அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குச் சீருடை !

Date:

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் சேவையைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தற்போது 5,000 ரூபாய் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
குறித்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2022 ஆம் ஆண்டுவரை அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது சீருடை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குச் சீருடை வழங்குதல் தொடர்பாகப் பௌத்த சாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் 2,500ரூபாய் சீருடைக் கொடுப்பனவு என்ற வகையில் வருடாந்தம் 7,500ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...