“‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்’ : அல்-பலாஹ் மாணவர்களுக்கு தலைமைத்துவ வழிகாட்டல் நிகழ்வு”

Date:

குவைத்தை மையமாக் கொண்டு இயங்கும் இலங்கை மாணவர்கள் ஒன்றியம் ‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்’ எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு, பலகத்துறை அல்-பலாஹ் கல்லூரியில் தலைமைத்துவ மற்றும் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வொன்றினை அண்மையில்  (31.08.2024) நடத்தியது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக Dr. ரிஷாட் புஹாரி மற்றும் அஷ்-ஷெய்க் எம்.டீ .எம். நுஸ்ரத் (நளீமி) கலந்துகொண்டனர்.

கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் எம்.யூ. பாயிஸ் (நளீமி), பாடசாலையின் பிரதி அதிபர்கள் எம்.எம்.எம். சதீஸ்கான், ஷஹாமா மொஹமட், மற்றும் உறுப்பினர்களும் இநிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

தரம் 11, 12, 13 ஆகிய மாணவர்களுக்கான இம் முழுநாள் நிகழ்வில் பகல் போசனம் மற்றும் மாலை நேர தேநீர் உபசாரம் போன்றவையும் வழங்கப்பட்டது.


தகவல்: அனஸ் அப்பாஸ்

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...