உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Date:

எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) தெரிவித்துள்ளது.

2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் இறுதிகட்ட பணியில் உள்ளதாக அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் விபரங்களை திருத்த வேண்டி ஏற்பட்டால் இம்மாதம் ஒன்பதாம் திகதி வரை இணையத்தளம் மூலம் திருத்த வசதியளிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...