தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விசாரணைகளை நிறைவடைந்ததும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளானது, பரீட்டை இடம்பெறுவதற்கு முன்னர் வெளியானதாகவும், அது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.