தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

Date:

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வளாகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துதல், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மனப்பான்மையை மேம்படுத்துதல், குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துதல், பொழுதுபோக்கை வழங்குதல் போன்ற பல நோக்கங்களின் அடிப்படையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...