நபிகளாரின் ஒழுக்க விழுமிய வாழ்வு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு நல்லதொரு முன்மாதிரி

Date:

தேசிய ஷூரா சபையின் மீலாத் செய்தி;

“நபியே நீர் மகத்தான பண்பாடுகளோடு இருக்கிறீர்” (அல்குர்ஆன்)

நபிகளார் (ஸல்) அவர்கள் தனது நுபுவத்துக்கு முன்னரான மக்கா வாழ்க்கையில் ஒழுக்க விழுமியங்களுடன், உயர் பண்பாடுகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களை மறுத்து, எதிர்த்து வந்தவர்கள் கூட அன்னாரது நற்குணங்களுக்கு சான்று பகர்ந்தார்கள். இது சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.

நபியவர்கள் தனக்கு நபித்துவம் கிடைப்பதற்க்கு முன்னரே வாய்மை, உண்மை, தைரியம், பொறுமை, சமூக சேவை, மனித சமுதாயத்தின் மீதான அக்கறை, பாவங்களில் இருந்து முற்று முழுதாக தூரமாக இருந்தமை இனபந்துக்களுடனான இறுக்கமான உறவு, அயல் வீட்டாருக்கான உரிமைகளை வழங்குவது போன்ற அடிப்படை பண்புகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

“ஒழுக்க விழுமியங்களை பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என நபி(ஸல்) கூறினார்கள்.

இதனால் அவர்கள் முன்வைத்த தூது அந்த மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. இஸ்லாம் என்றாலே பண்பாடுகள் தான் என்ற கருத்து வலுப்பெற்றது.

சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நபியவர்களது இந்த அடிப்படையான பண்புகளை கைக்கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூணவேண்டும்.

அல்லாஹ்வின் அருள் கிட்டுவதற்கும், பிற சமூகங்களது நன்மதிப்பை வென்று வாழ்வதற்கும், சமூக ஸ்திரப்பாட்டுக்கும் நபியவர்களது இந்தப் பண்புகளை அனைவரும் முன்மாதிரியாகக் கொள்வது அவசியமாகும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...