வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்

Date:

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் (02) அஞ்சல் திணைக்களத்திடம்  கையளிக்கப்படவுள்ளன.

அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில் குறித்த வாக்காளர் அட்டைகள், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 4 ஆம் திகதி மாவட்டச் செயலர் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை வழங்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தபால் மூல வாக்குகளை உரிய நாட்களில் வழங்க முடியாதவர்கள், செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில், தங்களின் பணியிடம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை வழங்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...