ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஈரான் கடந்த 1ம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது.முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல்.
ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல்.
அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா இந்த தாக்குதலை கண்டிக்கிறது. இஸ்ரேலிய நாட்டின் தாக்குதலுக்கு எங்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்.
மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் உறுதியான நிலைப்பாட்டை நாடுகள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே சீனாவால் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் அந்த மொத்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இது இஸ்ரேலுக்கு பெரிய அளவில் நெருக்கடியை கொடுக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் சீனா மேற்கொண்ட மாற்றத்தால் தற்போது இஸ்ரேல், அமெரிக்கா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன. முக்கியமாக ஈரான் – சவூதி ஒன்று சேர்ந்தது இஸ்ரேல், அமெரிக்காவை உலுக்கி உள்ளது.
பரம வைரிகளான ஈரான் – சவூதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்துள்ளன.
சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன. பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும். இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன.
ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவூதிஅரேபியா ஆதரிக்கிறது.
மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை திருடுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது.
பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் – சவூதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.