இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கவனம் செலுத்தியுள்ள சுவீடன்

Date:

சுவீடன் அரசாங்கம் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான சுவீடன் துாதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சுவீடன் தூதுவர் Jan Thesleff நேற்று (04) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டமைக்கு ஸ்வீடன் அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பில் சுவீடன் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுவீடன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுவர் போஷாக்கு பிரச்சினையை சுவீடன் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்த பிரதமர், இலங்கை பிராந்தியத்தில் உயர் சுகாதார குறிகாட்டிகளை பேணி வருகின்ற போதிலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போசாக்கு சவால்கள் இன்னும் காணப்படுவதாக வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...