உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்:அருட்தந்தை சிறில் காமினி

Date:

உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுக்களை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய தலைவரே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம் சிஐடியினர்  விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவரட்ண நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஷானி அபயசேகர மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்தும் எங்களிற்கு எந்த பிரச்சினையுமில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவு குறித்து பெருமளவு அறிக்கைகள் வெளியாகியுள்ளன,சிஐடியினர் இது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கட்டும்,அவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கம் ஷானி அபயசேகரவை நீக்கிய பின்னர் இது குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை,தொடர்ச்சியான அரசியல் தலையீடுகளால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்காக உதயகம்மன்பில இந்த விடயத்தை கையில் எடுத்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...