ஓட்டமாவடி மஜ்மா நகர் கொரோனா மையவாடியில், பள்ளிவாசல் மற்றும் பல்துறை கட்டடம் திறப்பு!

Date:

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட
மஜ்மா நகர் கொவிட் மையவாடியில் மஸ்ஜித் உட்பட பல் தேவை கட்டிடமொன்று நேற்று (01) திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக  கையளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றினால் மரணமடைந்து மஜ்மா நகரில் நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ள பேருவளை சீனன்கோட்டையை சேர்ந்த ஹாஜியானி சவாஹிர் இரீபதுல் ஹைரியா என்பவரின் நன்மைக்காக அவரது கணவர் அல் ஹாஜ் எம்.இஸட்.எம்.ஸவாஹிர் மற்றும் அவரது பிள்ளைகளினால் இந்த மஸ்ஜித் உட்பட பல்தேவை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மஜ்மா நகர் மையவாடியில் கொரானா தொற்றினால் மரணித்த 3,634 ஜனாஸாக்கள் நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...