இலங்கைக்கான கியூபா தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02)  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்த கியூபா எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய கியூபா தூதுவர், இலங்கைக்கு டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

எபோலா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு!

எபோலா வைரஸ் பரவல் நிலைமையை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச...

தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: புத்தளத்தில் ‘பெஃப்ரல்’ அமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில்...

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400...