தாக்குதலில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாரின் உடல் இரகசிய இடத்துக்கு மாற்றம்!

Date:

படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தரப்பால் உறுதிப்படுத்தப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யஹ்யா சின்வாரின் உடல் ஒரு மறைவான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம் அவருடைய இறந்த உடல் மரண பரிசோதனை செய்யப்பட்டு மறைவான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எதிர்காலத்தில் இந்த உடலை வைத்து ஹமாஸ் இயக்கத்தோடு பேரம் பேசுவதற்கு ஒரு துரும்பாக  இவர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மரண விசாரணை அறிக்கை தகவலின் படி,  சின்வார் அவர்களுடைய தலையிலே மிகத்தூரமாக இருந்து துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுதாகவும் அவரது உடலில் பல்வேறு இடங்களிலும் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் அதனாலேயே அவர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார்.

இதையடுத்து ஹமாஸ் படையின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார்.

இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...