அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு!

Date:

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்சாரம் மற்றும் நீர்க்கட்டண நிலுவைகள் அனைத்தையும் செலுத்தியதன் பின்னரே குறித்த இல்லங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும்  அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொடர்ந்தும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை பொருட்படுத்தாமல் செயற்படும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...