தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Date:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை  (31) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு மறுநாள் தமிழ் மாணவர்களுக்கு பாடசாலைக்கு வருவதில் சிரமம் என்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, 01.11.2024 அன்று தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும், அன்றைய கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 09.11.2024 அன்று நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது...

சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்

“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும் (28)....

இன்று கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

“சமாதான நடைபயணத்தின்” இறுதி நாளையொட்டி இன்று (28) கொழும்பில் விசேட போக்குவரத்து...