இன்று கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Date:

“சமாதான நடைபயணத்தின்” இறுதி நாளையொட்டி இன்று (28) கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மாலை 4:00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இதற்கான அரச விழா நடைபெறவுள்ளது.

பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர மாவத்தை, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ் சந்தி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மலர் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபில் வீதி மற்றும் கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள்.

எனவே முடியுமானவரை போக்குவரத்து நெரிசலைத் தடுப்பதற்கு சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...