பத்ஹுல்லாஹ் குலன் உயிரிழப்பு!

Date:

2016ஆம் ஆண்டு துருக்கியின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் FETO அமைப்பின் தலைவரான ஃபத்ஹுல்லாஹ் குலன் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

FETO பயங்கரவாத அமைப்பு என துருக்கி அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் அமைப்பின் தலைவரான இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நேற்று உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 83.

துருக்கியில் 2016 ஆம் ஆண்டு ஜுலை 15 ஆம் திகதி இந்த அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 251 பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

1999 முதல் அமெரிக்காவில் வாழ்ந்த வந்த ஆன்மீக போதகரான ஃபத்ஹுல்லாஹ் குலன் தலைமையில் (G)கெலன் என்ற இஸ்லாமிய சகோதர இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் FETO அமைப்பின் தலைவரான குலன், துருக்கி தலைவர்களால் வெளியேற்றப்பட வேண்டும் என கோரிக்கைககள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...