பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

Date:

பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தூய்மையான  இலங்கை என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர  குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகம பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும். அதேநேரம், அடுத்த மார்ச் மாதத்திற்குள் புதிய வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்.

அத்துடன், கிராமத்தில் உள்ள மக்களை வறுமையில் இருந்து மீட்பதற்காக விசேட நடவடிக்கைகள் பாதீட்டின் ஊடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் பொதுச் சேவைகள் துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...